• May 12 2026

‘கருப்பு’ படத்திற்கு மட்டும் இந்த அனுமதியா? முதலமைச்சர் விஜய்யின் முடிவால் பரபரப்பு.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது இயக்குநர் RJ பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை மீண்டும் உற்சாகப்படுத்த உள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். 

கதாநாயகியாக த்ரிஷா நடித்துள்ள நிலையில், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


நீதிமன்ற வழக்கை மையமாக கொண்டு, அதனுடன் கடவுள் நம்பிக்கைகள் மற்றும் சமூக கருத்துக்களை இணைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், தமிழகத்தில் முதல்வராக பதவியேற்றுள்ள விஜய் தலைமையிலான அரசு, கலை மற்றும் சினிமா துறைக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நிலையில், தற்போது ‘கருப்பு’ திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகளை திரையிட அதிகாரபூர்வ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

வரும் மே 14ஆம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு, வெளியீட்டு நாளிலும் அதனைத் தொடர்ந்து மே 15ஆம் தேதியிலும் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சி திரையிட அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அரசாணை எண் 460ன் படி, வழக்கமாக ஒரு நாளுக்கு நான்கு காட்சிகள் மட்டுமே திரையிடப்படும் நிலையில், தற்போது காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை ஐந்து காட்சிகள் திரையிட முடியும். 

தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வைத்த கோரிக்கையை ஏற்று இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் விஜய்யின் இந்த நடவடிக்கை சினிமா ரசிகர்கள் மற்றும் சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisement

Advertisement