• Aug 15 2025

11 வருட காதல்.. குழந்தைகளுடன் சைக்கிளில் சுற்றும் நயன்–விக்கி.! வைரலான ரொமான்டிக் வீடியோ!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் ஹாட் கூட்டணிகளில் ஒன்றான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியர் மீண்டும் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.


சமீபத்தில் வெளியான வீடியோவில், இந்த பிரபல தம்பதியர் தங்கள் இரட்டை குழந்தைகளை வைத்துக்கொண்டு சைக்கிள் ஓட்டுவதைக் காணமுடிந்துள்ளது. மிக அழகான அந்த தருணம் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, அந்த வீடியோவிற்கு விக்னேஷ் சிவன் சேர்த்துள்ள “11 வருட ஒற்றுமை” என்ற வார்த்தைகள் இணையவாசிகளை நெகிழவைத்துள்ளது.


இந்த வீடியோவில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் குழந்தைகளுடன் சைக்கிளில் சுத்திக்கொண்டு செல்கின்றனர். விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்ததோடு, கீழே "11 years of togetherness…blessed…" என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் நயன்தாராவுடன் தொடங்கிய காதல் பயணம், வாழ்க்கைத் துணையாய் வளர்ந்த தருணத்தை உணர்த்துகிறார்.


இந்த பதிவு திரையுலக ரசிகர்கள் மற்றும் சமூக வலைத்தள பயனர்களிடையே பரவலான பாராட்டுக்களையும், உணர்ச்சிகளையும் உருவாக்கியுள்ளது. இந்த வீடியோவிற்கு உடனடியாக லட்சக்கணக்கான பார்வையாளர்கள் கிடைத்துள்ளதோடு, கமெண்ட்ஸ் பகுதியில் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களையும், அபிமானத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement