• Jun 24 2025

சூர்யா,தனுஷ் இல்லையா..? வெற்றிமாறன்-சிலம்பரசன் கூட்டணி உறுதி..!

Mathumitha / 2 weeks ago

Advertisement

Listen News!

'விடுதலை 2' திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறன் எந்த நடிகருடன் அடுத்து இணைவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது. சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோரை வைத்து இவர் அடுத்து இயக்க உள்ளார் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது சிலம்பரசன் உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக புதிய செய்தி வெளியாகியுள்ளது.


வாடிவாசல் திரைப்படம் சில சர்ச்சைகளில் சிக்கி இருக்கின்ற சூழ்நிலையில் வெற்றிமாறன் தனது அடுத்த திட்டத்தை சிம்புவை முன்னனி கதாநாயகனாக வைத்து நடத்த உள்ளார் என கூறப்படுகிறது.


இத் திரைப்படம் இந்த மாதம் இறுதியில் படப்பிடிப்பைத் தொடங்கும் என திரைப்பட வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மாஸ் படமாக உருவாகும் இந்த கூட்டணி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement