• Jan 19 2025

துப்பாக்கி வேண்டாம் டான் போதும்! வாக்கை காப்பாற்றும் சிவா! பாராட்டும் கோலிவுட்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் அமரன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகின்றது. ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.


இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் SK23 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில் தான் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் SK23 படத்திற்கு பிறகு உடனடியாக சிவகார்த்திகேயன் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம். 

d_i_a


சிவகார்த்திகேயனை வைத்து டான் என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்தவர் தான் சிபி சக்கரவர்த்தி. அதன் பிறகு இவர் எந்த ஒரு படமும் இதுவரை இயக்கவில்லை. எனவே மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து படமெடுக்கலாம் என்ற நோக்கத்தில் சிவகார்த்திகேயனை அணுகியுள்ளார் சிபி சக்கரவர்த்தி. சிவகார்த்திகேயனும் அவரது இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். 


எனவே தான் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தான் நடிக்கவிருக்கும் படத்தை தள்ளிவைத்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கிய வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடித்தால் அவரின் மார்க்கெட் மேலும் உயரும். இருப்பினும் தான் கொடுத்த வாக்கிற்காக சிவகார்த்திகேயன் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement