• Sep 17 2025

என் மகனுக்கு கடவுளின் கிருபை ரொம்பவே இருக்கு..! சீக்ரெட் சொன்ன அனிருத் அப்பா

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல இசை அமைப்பாளராக திகழ்ந்து வருபவர்  அனிருத்.  தற்போதுள்ள  2கே கிட்ஸ்களுக்கு மிகவும் பேவரைட் ஆன பாடகராகவும் காணப்படுகின்றார். இவருடைய  மியூசிக்கில் வைப்  பண்ணாத ரசிகர்களே இருக்க மாட்டார்கள்.  அந்த அளவிற்கு இவருடைய  மியூசிக்,  பிஜிஎம்,  பாடல்கள் காணப்படும்.

தனுஷ் நடித்த மூன்று படத்தில்  இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத். அதற்கு பின்பு  விஜய், அஜித், ரஜினிகாந்த்,  சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசை அமைத்து பிரபலமானார்.  அது மட்டும் இல்லாமல் லண்டன், துபாய் போன்ற நாடுகளிலும் இவருடைய இசைக் கச்சேரி நடைபெற்று வருகின்றன.

ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான கூலி திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார்.  இந்த படத்தை தூக்கி நிறுத்தியது அனிருத்தின் பிஜிஎம் தான் என படத்தைப் பார்த்த ரசிகர்கள் தெரிவித்து இருந்தார்கள்.  ரஜினிகாந்த் நடிக்கும் படங்களில் தற்போது கூடுதலாக அனிருத்தே இசையமைப்பாளராக காணப்படுகின்றார்.


இந்த நிலையில், அனிருத்தின் தந்தை  அளித்த பேட்டியில் அனிருத்துக்கு கடவுளின் கிருபை இருக்கு என கூறியுள்ளார். 


மேலும் அவர் கூறுகையில், 3 படம் பண்ணும் போது அவருக்கு 19 வயசு. அப்போது இருந்து இப்போ வரைக்கும் எந்த ப்ராஜெக்ட் பண்ணனும் எது பண்ண கூடாது என்று முடிவு எடுப்பது எல்லாமே அனிருத்தான். நான் அதில் தலையிடுவதில்லை.

இந்த வயசுல அவன் சாதித்து இருக்கான் என்றால் ஒரு தந்தையாக இல்லை யாராக இருந்தாலும் பெருமைப்படுவேன்.  எதை நாம் விரும்பி பண்றோமோ அதுவே தொழிலாக அமைந்தது. அதுவே வருமானத்தையும் கொடுத்தால்  அதான் வாழ்க்கையில் பெஸ்ட்டாக இருக்கும். 

இப்ப அவன் கூட வாசிக்கிற பசங்க தான் அப்போவும் இருந்தாங்க  அதுதான் பெரிய விஷயம். அவன்கூட இதை நிறைய விழாக்களில்  சொல்லி இருக்கின்றார் என்று அனிருத்தின் தந்தை  ரவி ராகவேந்திரா தெரிவித்து உள்ளார்.

Advertisement

Advertisement