• Aug 27 2025

சூரி பற்றி பலரும் அறிந்திடாத உண்மை... நகைச்சுவை நாயகனின் பிறந்த நாள் ஸ்பெஷல்..!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

இன்று திரையுலகத்தில் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கும் சூரியின் வாழ்க்கைப் பயணம், பலர் உணர்ச்சியோடு பார்த்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. ஆரம்பக் காலத்தில் அவர் கூலி வேலை, பெயிண்டர், லைட் மேன் போன்ற பல வேலைகளை செய்து தனது வாழ்க்கையை முன்னேற்றினார்.


மிகுந்த உழைப்பும், விடாமுயற்சியும் மட்டுமே அவருக்கு ஆதாரமாக இருந்தது. தன்னம்பிக்கை இருந்தால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு சூரி.

அவர் முதலில் திரையில் அங்கங்கே தோன்றும் துணை நடிகராகத் தான் தொடங்கினார். ஒரு சில விஷயங்களைப் பார்ப்பவர்களுக்கு நகைச்சுவையாக வெளிப்படுத்தும் திறமை அவரிடம் இருந்தது. அதை உணர்ந்த திரைத்துறை இயக்குநர்கள், அவருக்கு சிறிய அளவிலான காமெடி ரோல்களை வழங்கத் தொடங்கினர்.


சூரியின் வாழ்க்கையை மாற்றியமைத்த திரைப்படம் என்னவெனில், 2009-ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடிகுழு. இந்த படத்தில் அவர் நடித்த கேரக்டர் மக்கள் மனதில் ஒட்டிக்கொண்டது. அதன்பின், சூரியின் புகழ் வானில் உயரத் தொடங்கியது.

அந்தவகையில் இன்று பிறந்த நாளையொட்டி சூரி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு, பல திரையுலக நட்சத்திரங்கள், இயக்குநர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement