• Oct 16 2024

என் மதிப்பு போயிடுச்சு, உயிரைமாய்த்துக்கொள்ள போறேன், என் குடும்பத்தை விட்டு விடுங்கள்- பிக்பாஸ் ஐஷு போட்ட முதல் பதிவு

stella / 10 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் கமலஹாசன் பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து, தீர விசாரிக்காமல் வெளியேற்றியதற்கு என்ன காரணம்? என்பது குறித்து தன்னிலை விளக்கம் கொடுத்தார். இதனை பலர் ஏற்றுக்கொள்ளவில்லை.

 மேலும் மாயா - பூர்ணிமா போன்றவர்களை, கமலஹாசன் விசாரிக்காமல் மூடி மழுப்பி பேசுவதாகவும் விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.


மேலும் இந்த வாரம் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த போட்டியாளரான கானாபாலா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு புறம் இருக்க கமந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு ஐஷு வெளியேறியிருந்தார்.இதற்கு காரணம் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நிக்சனுடன் செய்த சேட்டைகள் தான் காரணம் என்று கூறப்பட்டது.


இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு ஒரு வாரம் கழிந்த பின்னர் தற்பொழுது ஐஷு ஒரு உருக்கமான பதிவு ஒன்றினைப் போட்டுள்ளார். அதில் கூறியதாவது, இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு இருந்தாலும் என்னுடைய மதிப்பை இழந்து விட்டேன்."என் குடும்பத்திற்கே அவமானம் நான். என் உயிரை விடவும் முடிவெடுத்துவிட்டேன், ஆனால் என் மீது பெற்றோர் வைத்திருக்கும் கடைசி நம்பிக்கைக்காக தான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்" என ஐஷு கூறி இருக்கிறார்.


"அந்த வீட்டில் காதல், நட்பு என சில விஷயங்கள் என் கண்ணை மறைத்துவிட்டது. தவறு செய்தது நான், என்னை என்ன வேண்டுமானலும் சொல்லுங்கள். என் குடும்பத்தை விட்டுவிடுங்கள்" என்னில் தான்அனைதது தவறும் உள்ளது என்றும் அவர் உருக்கமாக கேட்டிருக்கிறார்.  

 

Advertisement