• Oct 09 2024

அரிதான வின்டேஜ் போட்டோவை பகிர்ந்து நயன்தாராவுக்கு வாழ்த்துத் தெரிவித்த ஸ்ருதிஹாசன்- நயன் போட்ட ரிப்ளை

stella / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார் நடிகை நயன்தாரா.அதிலும் தமிழ் திரையுலகில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் கொண்டாப்படுகிறார்.

சமீபகாலமாக குடும்பம், நடிப்பு, பிசினஸ் என படு பிசியாக இருக்கும் இவர் இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றார். இவருக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


 நயன்தாராவின் கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு "ஹாப்பி பர்த்டே மை தங்கமே" என்னும் கேப்ஷனோடு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியிருந்தார்.

 இந்த நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் நயன்தாராவின் மிகவும் அரிதான வின்டேஜ் போட்டோவை பகிர்ந்து, "நான் என்ன கண்டுபிடித்திருக்கிறேன் பார்த்தீர்களா ? ஹேப்பி ஹேப்பி பர்த்டே நயன்தாரா.. எப்போதும் நன்மை கிடைக்க வாழ்த்துக்கள்... எப்போதும் உங்களுக்கு நல்லவை கிடைக்கட்டும்.. இதே போல எப்போதும் ராணி போல இருங்கள்" என்னும் கேப்ஷனோடு நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார்.


ஸ்ருதிஹாசனின் இந்த பிறந்தநாள் வாழ்த்து ஸ்டோரீயை அவரது ஸ்டோரியில் பகிர்ந்திருக்கும் நயன்தாரா "நன்றி டார்லிங்" என பதில் கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement