சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட், காலையில் மனோஜ் பார்க்கும் போது க்ரிஷ் அவருடைய ஷுவுக்கு போலீஸ் போட்டு கொண்டு இருக்கின்றார்.
ஆனாலும் எதற்காக இப்படி செய்கின்றாய் என்று கேட்க, என்னுடைய ஷுவுக்கு போலீஸ் போட்டேன். அப்படியே உங்களுடைய ஷுவுக்கும் போலீஸ் போட்டேன் என்று சொல்லுகின்றான் க்ரிஷ்.
அந்த நேரத்தில் வந்த முத்து, எதற்காக நீ இது எல்லாம் செய்கின்றாய் என்று கேட்க, மனோஜ் உன்னை செய்யச் சொன்னானா? என்று மனோஜை திட்டுகின்றார்.
ஆனாலும் நான் தான் அதை செய்தேன் என்று க்ரிஷ் சொல்லுகிறார். அதற்குப் பிறகு தன்னை ஸ்கூலில் கொண்டு போய் விடுமாறு க்ரிஷ் கேட்க, நான் என்ன உனக்கு வேலைக்காரனா? நான் மிகப்பெரிய தொழில் அதிபர் என்று மனோஜ் பெருமை பேசி தன்னால் விட முடியாது என்று சொல்லுகிறார்.

இதன்போது ரோகிணி முறைத்துப் பார்க்கின்றார். உடனே கல்யாணிக்கு பாய்ந்த மனோஜ், சரி கொண்டு போய் விடுகின்றேன் என சொல்லுகின்றார்.
அதற்கு பிறகு ரவி காம்பெட்டிஷனில் கலந்து கொள்வதற்காக செல்லுகின்றார். ஆனாலும் விஜயா ரவி தனியாக போவதை விரும்பவில்லை. ஸ்ருதியிடம் நீயும் செல்லலாம் தானே என்று சொல்ல, எனக்கு என்னுடைய புருஷன் மீது நம்பிக்கை இருக்கிறது என்று அவர் சொல்லுகின்றார்.
இறுதியில், முத்து சவாரி செல்லும் போது அங்கு வந்த தம்பதியினர் குழந்தை ஒன்றை தத்தெடுக்கின்றார்கள். இதன் போது முத்துவுக்கும் குழந்தையை தத்தெடுப்பதற்கு ஆசை ஒன்று வருகின்றது. இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!