• Dec 12 2025

மீளாத வேதனையில் கோமதி.. பாண்டியனின் வார்த்தையால் சரவணனுக்கு கிடைத்த விடிவுகாலம்.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, மயில் பாண்டியனோட காலில விழுகிறதைப் பார்த்த கோமதி மன்னிக்கிற மாதிரியான தப்பா நீ பண்ணியிருக்கிற என்று கேட்கிறார். மேலும் திட்டம் போட்டு ஏமாத்திட்டு இப்ப நடிக்கிறியா என்று கேட்கிறார். அதுக்கு மயில் குடும்ப சூழ்நிலையால பொய் சொல்ல வேண்டி வந்திட்டு என்கிறார். அதனை அடுத்து கோமதி இந்தக் குடும்பத்தை இன்னும் ஏமாத்த  நினைக்கிறீயா என்று கோபமாக கேட்கிறார்.


பின் உன்ர இடத்தில நான் இருந்திருந்தால் ராத்திரியோட ராத்திரியா எங்கயாவது போயிருப்பேன் என்கிறார் கோமதி. அதைக் கேட்ட மயில் நீங்க பேசுறதைக் கேட்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்கிறார். அதைத் தொடர்ந்து அரசி மயிலைப் பார்த்து சுயம்பரத்தில நிறைய பேர் இருந்தாங்க தானே அவங்களை போய் ஏமாத்துறதை விட்டுட்டு ஏன் எங்கட அண்ணாவ ஏமாத்தினீங்க என்று கேட்கிறார்.

அதுக்கு கோமதி நம்மள பார்த்தவுடனே தான் ஏமாத்தக் கூடிய மாதிரி இருந்திருக்கும் என்கிறார். இதையெல்லாம் கேட்ட பாண்டியன் உங்க அப்பா, அம்மாவ போன் பண்ணி வரச்சொல்லு என்கிறார். பின் பாண்டியன் மயில் அப்பாவுக்கு போன் பண்ணி உடனே வரச் சொல்லுறார். மறுபக்கம் காந்திமதி கோமதி வீட்ட ஏதோ பிரச்சனை நடக்குது என்று வடிவு கிட்ட சொல்லுறார்.


அதைக் கேட்ட வடிவு அவங்க பிரச்னையை அவங்களே பேசி சமாளிச்சுடுவாங்க என்று சொல்லுறார். அதனை அடுத்து, குழலி பாண்டியன் வீட்ட வந்து மயிலை பேசிக்கொண்டிருக்கிறார். அதைக் கேட்ட பாண்டியன் கொஞ்சம் அமைதியா இரு என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement