• Jan 18 2025

மனோஜை ஓடவிட்டு புரட்டியெடுத்த முத்து.. ஒரு பதிலால் மொத்த குடும்பத்துக்கும் ட்டுஸ்ட்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில்  இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்று பார்ப்போம். 

அதில், மனோஜ் வீட்டார்களை நடிக்க கூப்பிட, முத்து எவ்வளவு காசு கொடுப்பாய் என்று கேட்கின்றார். அதற்கு இது நம்ம கடை.. காசு இல்லை என்று சொல்லுகிறார். இதனால் முத்து தனக்கு சவாரி இருக்கின்றது. அதனால் நடிக்க வர முடியாது என்று சொல்லி செல்கின்றார். இதன் போது தான் அப்போதே சந்தோஷ் சாரிடம் சொன்னதாகவும் சந்தோஷ் சார் தான்  உன்னை கூப்பிட்டதாகவும் முத்துவுக்கு பொய் சொல்லுகின்றார் மனோஜ்.

இதனால் முத்து சந்தோஷ் சார் சொன்னாரா? என்று சந்தோஷ் சாருக்காக நடிக்க செல்கின்றார். மீனா தனக்கு நடிக்க வராது என்று சொல்ல, அப்படி என்றால் தனக்கு வேறு ஒரு பொண்டாட்டியை ரெடி பண்ணுமாறு முத்து சொல்லுகின்றார். இதனால் கோபப்பட்டு முத்துவுக்கு அடிக்கின்றார் மீனா. அதன் பின்பு நடிப்பதற்கு சம்மதம் தெரிவிக்கின்றார்.

d_i_a

அடுத்த நாள் எல்லாரும் நடிப்பதற்கு ஆயத்தமாக கிளம்பி செல்கிறார்கள். இதன்போது டைரக்டர் தான் சொன்ன மாதிரி நடிக்குமாறு எல்லோருக்கும் சொல்லிக் கொடுக்கின்றார். இருந்தாலும் அண்ணாமலை நடிப்பது சரியில்லை என அவரிடம் ரொம்ப கடுமையாக நடந்து கொள்கின்றார்.


ஒரு கட்டத்தில் டைரக்டரின் நடவடிக்கையை பார்த்து கோவப்பட்ட முத்து போனா போகுது என்று சும்மா நடிக்க வந்தா  ரொம்ப ஓவரா தான் பண்ணுறீங்க என்று சொல்லுகின்றார். இதை கேட்ட டைரக்டர் சந்தோஷ்  சார்  யாரையும் சும்மா நடிக்க கூப்பிடல.. ஒருவருக்கு 25000 படி 2 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார் என்ற உண்மையை போட்டு உடைக்கின்றார்.

இதை தொடர்ந்து வீட்டுக்கு வந்த முத்து, மனோஜிடம் ஏன் இந்த விஷயத்தை சொல்லவில்லை என கேட்க, எல்லோரும் நடித்து முடித்த பிறகு பேமெண்ட் கொடுக்கலாம் என்று நினைத்தேன் என்று சொல்லுகின்றார்.

ஆனாலும் எல்லாரும் தனித்தனியாக வினாவ, மீண்டும் மீண்டும் அதே பதிலைத்தான் சொல்லுகின்றார் மனோஜ். ஒரு கட்டத்தில் கோபப்பட்ட ரவி, முத்து அவரை அடிப்பதற்காக விரட்டுகின்றார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement