• Jan 18 2025

தென்னிந்திய சினிமாவில் பரபரப்பு; தனுசுக்கு கிளுகிளுப்பு..! பாங்காக் பறக்கும் இட்லி கடை

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்பவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் இவருடைய உடலை பார்த்து பலரும்உருவக் கேலி செய்தார்கள். ஆனாலும் தற்போது பலரும் வியந்து பார்க்கும் ஒரு ஸ்டாராக உயர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் பாடல் ஆசிரியராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருகின்ற தனுஷின் அசுர வளர்ச்சி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

d_i_a

தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளியான ராயன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிய சக்கைப்போடு போட்டது. வசூல் ரீதியாகவும் இந்த படம் 100 கோடி ரூபாவை கடந்து சாதனை படைத்திருந்தது. ராயன் படம் சகோதரர்களுக்கு இடையிலான பந்த பாசம், அதனால் ஏற்பட்ட வன்முறை என்பவற்றை அதிரடியாக எடுத்துக்காட்டியிருந்தது.

இந்த படத்தை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை ஆகிய படங்களை  இயக்கி வருகின்றார் தனுஷ். இது தொடர்பான அப்டேட்டுகளும் அடிக்கடி வெளியானவாறு உள்ளன. சமீபத்தில் தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் கிளிம்ஸ் வீடியோவும் வெளியாகி வைரலாகி இருந்தது.


இந்த நிலையில், இட்லி கடை படப்பிடிப்பிற்காக தனுஷ் மற்றும் அவருடைய படக்குழுவினர் பாங்காக் செல்ல உள்ளதாக  தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அங்கு படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இட்லி கடை படத்தில் நடிகர் ராஜ்கிரன், சத்யராஜ், நித்தியா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றார்கள். இந்தப் படம் எதிர்வரும் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement