• Jul 14 2025

மனோஜை தன்ர வழிக்கு கொண்டுவந்த ரோகிணி.! மீனாவை நினைத்து Feel பண்ணும் முத்து.!

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, ரோகிணி மனோஜை பார்த்து மீனா வீட்ட இல்ல என்றாலும் முத்து ஒரு இடத்தில கூட மீனாவை விட்டு கொடுக்கவே இல்ல என்கிறார். மேலும் ஒரு நல்ல புருஷனாக முத்து நடந்து கொள்ளுறான் எனச் சொல்லுறார். அதைக் கேட்ட மனோஜ் என்னை நீ மனோஜோட சேர்த்து வைச்சுக் கதைக்கிறது பிடிக்கல என்று சொல்லுறார். பின் ரோகிணியை கட்டி பிடிச்சு sorry என்னை மன்னிச்சிரு என்று சொல்லுறார். அப்புடியே ரெண்டு பேரும் ரொமான்ஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். 


இதனை அடுத்து ரோகிணியும் மனோஜும் சந்தோசமாக இருப்பதை பார்த்த விஜயா ரூம் கதவை தட்டுறார். பின் மனோஜ் விஜயாவை பார்த்து ஏன் கதவை தட்டினீங்க என்று கேட்கிறார். அதுக்கு விஜயா ஏதோ சத்தம் கேட்டது என்று சொல்லுறார். அதை தொடர்ந்து மனோஜ் விஜயா கிட்ட ரோகிணியை காட்டிக் கொடுக்காமல் இருந்ததை பார்த்த ரோகிணி சந்தோசப்படுறார்.

பின் முத்து மீனாவை நினைத்துப் பார்த்து அழுது கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து சீதா மாமியார் வீட்ட போறதுக்கு கிளம்புறார். அப்ப சீதாவை பார்க்க வந்த எல்லாரும் முத்துவை புகழ்ந்து பேசுறதை பார்த்த அருண் ரொம்பவே கோபப்படுறார். பின் மீனா சீதா கிட்ட மாமியார் வீட்ட எப்புடி நடந்துக்கணும் என்று சொல்லுறார். இதனை தொடர்ந்து சீதா முத்துவுக்கு போன் எடுத்துக் கதைச்சுக் கொண்டிருக்கிறார். 


பின் சீதா மீனா வீட்ட இருந்து போறதை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து முத்து தன்ர friend  கிட்ட போய் பொண்டாட்டி இல்லாதது ரொம்பவே கஷ்டமாக இருக்கு என்று சொல்லுறார். அதுக்கு friend மீனா தான ஒன்னும் போகல நீ தான் அவளை அனுப்பி வைச்சிருக்க என்று சொல்லுறார். பின் மீனா சமைச்சு கொடுத்த சாப்பாட்டை முத்து சாப்பிடுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement