• Apr 24 2025

மீனாவின் நிலையைப் பார்த்த குதூகலத்தில் விஜயா..சிந்தாமணிக்கு எதிராக களத்தில்இறங்கிய முத்து!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மீனா அண்ணாமலையப் பாத்து சீதா சீட்டுக் கட்டித் தந்த பணம் இப்ப இல்லாதத நினைக்க எனக்கு ரொம்பவே கவலையா இருக்கு என்று சொல்லுறார். அதைத் தொடர்ந்து முத்து ரவியப் பாத்து இவள்கிட்ட பணம் இருக்கிறதப் பாத்த ரெண்டு திருட்டுப் பசங்க இவபின்னாடியே வந்து பணத்த எடுத்திருக்கிறாங்க என்று சொல்லுறார். அதைக் கேட்ட விஜயா பணத்த ஒழுங்கா எடுத்துக் கொண்டு போயிருக்கோணும் என்கிறார்.

இதனை அடுத்து மீனா, ஓடர் போனது கூட எனக்குப் பெருசா கவலை இல்ல மாமா ஆனா என்ர தங்கச்சி அவ பிரெண்ட் கிட்ட கடனா வாங்கின பணம் இப்ப இல்லாம போனது தான் கவலையா இருக்கு என்கிறார். அதைக் கேட்ட அண்ணாமலை இதில உன்னோட தப்பு எதுவும் இல்ல என்று சொல்லுறார். அதைத் தொடர்ந்து விஜயா பெருசா ஒன்னும் அடிபடேல தானே கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்திட்டு போய் சமைக்கிற வேலையப் பாக்கச் சொல்லுறார்.


அதைக் கேட்ட முத்து பாத்தியா அப்பா இவங்கள என்ர பொண்டாட்டிக்கு அடிபட்டிருக்கு சமைக்கச் சொல்லுற என்று கோபப்படுறார். அதுக்கு அண்ணாமலை உனக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா என்று விஜயாவப் பாத்துக் கேக்கிறார். அதைத் தொடர்ந்து அண்ணாமலை பொலிஸிட்ட கம்பிளைன்ட் பண்ணலாம் என்று சொல்லுறார்.

அதுக்கு மனோஜ் அப்ப பணம் கிடைச்ச மாதிரித்தான் என்றதுடன் என்ட முப்பது லட்சமே இன்னும் கிடைக்கல இந்த ரெண்டு  லட்சம் கிடைச்சிருமோ என்கிறார். அதைத் தொடர்ந்து மீனாவோட அம்மா இதைக் கேள்விப்பட்டு அழுதுகொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement