பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட், ஈஸ்வரியையும் இனியாவையும் சாப்பிட வருமாறு ஜெனி அழைக்க, அவர்கள் வரவில்லை. இதன்போது ஈஸ்வரி நீயும் உனது மாமியார் போலவே கதைக்க பழகி விட்டாய் என்று பேசுகின்றார். அந்த நேரத்தில் செழியனும் அங்கு வர, நீயும் சாப்பிட வரவில்லையா என்று குத்துக் கதையாக பேசுகின்றார் ஜெனி.
இதனால் கோபப்பட்டு ஈஸ்வரி ஜெனிக்கு பேச, அவர் பாக்கியா செய்வதில் எந்த தவறும் இல்லை. அவர் நியாயமாக தான் கதைத்தார். கோபி அங்கிள் ஒன்றும் சின்ன குழந்தை இல்லை என்று ஈஸ்வரிக்கு பதில் அடி கொடுக்கின்றார். ஆனாலும் ஈஸ்வரி நீ குழந்தை பெற்றாய் தானே எப்படி வளர்க்கிறாய் என்று பார்ப்போம் என்று சொல்ல, அதற்கு சத்தியமா உங்களைப் போல வளக்க மாட்டேன் என்று சொல்லிச் செல்கின்றார்.
மேலும் செழியன் ரூமுக்கு வந்த பிறகு இதைப் பற்றி பேசி, நீ பிழ விட்டபோது ஆன்ட்டி எனக்கு ஆதரவா தான் இருந்தாங்க.. ஆனா ஈஸ்வரி பாட்டிக்கு எது சரி எது தப்பு என தெரியவில்லை என சொல்கிறார்.
இதைத்தொடர்ந்து கோபி நன்றாக குடித்துவிட்டு வீட்டுக்கு வர பாக்யா கதவை திறக்கின்றார். இதன்போது ஈஸ்வரி அவரைப் பார்த்து கவலையில் இப்படி உன்னை பார்க்கவா நான் இருக்கின்றேன் என புலம்பி விட்டு ரூமுக்கு செல்கின்றார்.
இதன் போது கோபி பாக்கியாவை அழைத்து ராதிகா என்னை விட்டு நிரந்தரமாக சென்று விட்டார் என்ற புலம்புகின்றார். இதனை ஈஸ்வரியையும் கேட்டுக் கொண்டிருந்து கோபி அருகில் வந்து நீ என்னதான் சொன்னாலும் எனது பிள்ளையை விட்டுக் கொடுக்க முடியாது என்று பாக்யாவுக்கு புலம்பி கொட்டுகிறார்.
அதன் பின்பு அடுத்த நாள் பாக்கியா ராதிகா வீட்டுக்கு செல்கிறார். அங்கு கமலா பாக்கியாவிடம் ராஜேஷை திருமணம் செய்த போது அவள் சந்தோஷமாக இல்லை, கோபியை திருமணம் செய்தும் அவள் சந்தோஷமாகவில்லை ராதிகாவின் இந்த நிலைக்கு நாங்க தான் காரணம்.
கோபி உன்னுடைய புருஷன் என்று தெரிந்து ராதிகா வேண்டாம் என்று தான் சொன்னா.. ஆனால் நாங்கள் தான் ஊருக்கே தெரிந்து விட்டது என்று அவரை திருமணம் செய்து வைத்தோம் என்று பாக்யாவுடன் பக்குவமாக பேசுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!