• Aug 18 2025

பூக்களுக்கு நடுவே பொன்வண்டாக மின்னும் மிருணால் தாக்கூர் !

Thisnugan / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய திரைத்துறையில் ஒரு திரைப்படம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.திரைப்படங்களில் நாம் காதல் காட்சிகளையும் கதைகளையும் தாண்டிய ஒரு காதல் காவியமாய் வெளிவந்திருந்தது "சீதா ராமம்".நடித்த நடிகர்கள் யாவரும் தன்னை விட யாராலும் அப் பாத்திரத்தை நடிக்க முடியாது எனும் வகையில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.


குறித்த படத்தில் நாயகியாக நடித்த மிருணால் தாக்கூருக்கு அவரே எதிர்பாரா பாராட்டுகளும் அடுத்தடுத்த வாய்ப்புகளும் வந்து சேர்ந்தன.சின்னத்திரை நடிகையாக நடிப்பு துறையில் அறிமுகமான மிருணால் தாக்கூர் "தாக்கூர் லவ் சோனியா" என்ற ஹிந்தி நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்தடுத்து இந்திய திரைத்துறையில் கிடைக்கும் வாய்ப்புகளை சரிவர பயன்படுத்தும் மிருணால் தாக்கூர் சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார்.தற்சமயம் மிருணால் தாக்கூர் தனது இன்ஸ்டா  பக்கத்தில் சூர்யகாந்தி தோட்டத்தில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.இதை பார்த்த இவரது ரசிகர்கள் பூக்களுக்கு நடுவே பொன்வண்டு என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

Advertisement

Advertisement