• Jan 18 2025

தெலுங்கு சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள்.குவியும் வாழ்த்துக்கள் !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

இந்திய திரைத்துறையில் இன்றைய நாளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான மகேஷ் பாபு தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருகிறார்."ராஜகுமாருடு" படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான மகேஷ் பாபு ஒரு வெற்றி நாயகனாக வலம் வருகிறார்.

Mahesh Babu

இவரின் நடிப்பில் 2003 இல் வெளியான "ஒக்கடு" திரைப்படம் இவருக்கு தெலுங்கில் பெரும் பாராட்டையும் வரவேற்பையும் கொடுத்தது.இதே திரைப்படம் 2004 இல் தமிழில் இளைய தளபதி விஜயின் நடிப்பில் "கில்லி" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு தமிழில் பெரும் வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியலில் இணைந்தது.

Image

இந்நிலையில் இன்றைய தினம் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடும் மகேஷ் பாபுவிற்கு அவரின் ரசிகர்கள் மற்றும் இந்திய திரைதுறையினரிட மிருந்து வாழ்த்துக்கள் குவிந்தவாறுள்ளன.இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் திரைத்துறை சார் நிறுவனங்கள் தங்கள் உத்தியோகபூர்வ பக்கங்களில் மகேஷ் பாபுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.



Advertisement

Advertisement