• Oct 13 2024

"NOVP" திரைப்படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் சொன்னது என்ன ?

Thisnugan / 2 months ago

Advertisement

Listen News!

கடந்த 2 ஆம் திகதி உலகளவில் வெளியானது "நண்பன் ஒருவன் வந்த பிறகு" திரைப்படம்.ஆனந்த் ராமின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவான இத் இத்திரைப்படம் ஓர் நண்பர் நாடகத் திரைப்படமாகும்.படத்தில் நாமறிந்த பிரபலங்களான ஆனந்த் ராம் ,பவானி ஸ்ரீ ,ஆர்.ஜே.விஜய், இளங்கோ குமரவேல் , குளப்புள்ளி லீலா ,இர்ஃபான், வெங்கட் பிரபு,ஐஸ்வர்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Nanban Oruvan Vantha Piragu X Review ...

ரசிகர்களின் பெரு வரவேற்புடன் வெளியான இத் திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்று தொடர்ந்தும் திரையரங்குகளில் ஓடி வருகிறது.இந்நிலையில் படத்தை பார்வையிட்ட நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவை வாழ்த்தி ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார்.


படத்தின் மொத்த சீன்களில் பாதிக்கும் மேலானவை அனைவர் வாழ்வுடனும் நேரடியான தொடர்பையும் நியாபகத்தையும் கொடுக்கும் எனவும் தனது பெரும் நம்பிக்கையான "அற்புதமான நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குவியுமடா" என்பது மொத்த படத்தின் சாரமாக அமைத்திருப்பது தனக்கு மிகவும் பிடித்துள்ளதெனவும் கூறிய சிவகார்த்திகேயன் அனைவரையும் "நண்பன் ஒருவன் வந்த பிறகு" திரைப்படத்தை காண திரையரங்கு நோக்கி அழைத்துமுள்ளார்.


Advertisement