• Jan 19 2025

மாயா பூர்ணிமாவை புருஷன் என்று தான் கூப்பிடுறா, கமலும் அப்பிடித்தான்- பகீர் தகவலைக் கூறிய சுசித்ரா

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 6 பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியை விட, 7-ஆவது சீசன் பரபரப்பாகவும், சண்டை - சச்சரவுகளை பஞ்சம் இல்லாமலும் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும், பூர்ணிமா ரவி மற்றும் மாயா இருவரும் சேர்ந்து கொண்டு அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லை எனலாம்.

இந்த நிகழ்ச்சியிலிருந்து இறுதியாக ஐஸ்வர்யா வெளியேறியிருந்தார். இதனை அடுத்து இந்த வாரம் யார் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்கள் மத்தியில் காணப்படுகின்றது.


மேலும் பிரதீப்பிற்கு ரெட்காட் கொடுத்த விஷயத்தைப் பற்றி தற்பொழுதும் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருவதோடு பிரதீப்பிற்கு தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் பிக்பாஸ் பிரபலமும் பாடகியுமான சுசித்ரா அண்மையில் ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கமல்ஹாசனை பிக்பாஸின் ஓனர் என்று சொல்லாதீங்க, அவர் ஒரு தொகுப்பாளர் மட்டுமே, மக்களின் பிரதிநிதி என்று அவரைச் சொல்வதற்குப் பதிலாக மாயாவின் பிரதிநிதி எனலாம்.


கமல்ஹாசன் கண்ணுக்கு எதுவுமே அழகாகத் தெரியாது, யாராவது இன்னொருத்தரை அசிங்கம் என்று சொன்னால கூட இருந்து சிரிப்பாரு அவரு,விசித்ரா கிட்ட நிறையத் தலைமைத்துவப் பண்பு தெரிகின்றது. எல்லாவற்றிலும் அளவாக இருக்கிறாங்க, பிரதீப்பிற்கு இடையிலான நட்பினை இப்பவரைக்கும் சூப்பராக பேணிட்டு இருக்கிறாங்க,

மாயா பூர்ணிமாவை புருஷன் என்று தான் கூப்பிடுறாங்க, இது 24 மணிநேர ஷோவில் வருது, அவங்க லெஸ்பியன் இதெல்லாம் அவங்க கேட்கமாட்டாங்களா எனத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement