• Jan 19 2025

காங்கிரஸ் கட்சிக்கு பல்டியடித்த மன்சூர் அலிகான்..! முதலில் சந்தித்து இவரை தானா?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் ஆரம்பத்தில் வில்லனாகவும், தற்போது அவரின் செயல்களால் காமெடி நடிகராகவும் காணப்படுவர் தான் நடிகர் மன்சூர் அலிகான்.

இவர் அண்மையில் தான் இந்திய ஜனநாயக புலிகள் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து, கடந்த வாரம் தேர்தல் பிரச்சாரங்களில் கடுமையாக ஈடுபட்டதால் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனாலும், கடந்த 19ம் திகதி இடம்பெற்ற தேர்தலில் தனது தொகுதியை பார்ப்தற்காக மருத்துவ மனையில் இருந்து நேராக, வாக்குச்சாவடிக்கு சென்று இருந்தார்.


இந்த நிலையில், தற்போது முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன், மீண்டும் தாய் கழகத்தில் இணைய உள்ளேன் என மன்சூர் அலிகான் அதிரடியாக தெரிவித்து உள்ளார்.

அதன்படி,  சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

அதுமட்டுமின்றி, ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்து கடிதம் ஒன்றையும் ஒப்படைத்து உள்ளார். தற்போது இந்த தகவல் வைரலாகி உள்ளது. 

Advertisement

Advertisement