• May 02 2026

விஷாலுக்கு வந்த புது பிரச்சனை! படம் ரிலீஸ் பண்ண முடியாது! ரெட் ஜெயண்ட் காரணமா இருக்குமா?

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் போது அதனை வெளியிட விடாமல் பிரச்னை செய்வது வழக்கமான ஒன்றே ஆகும். அவ்வாறே சமீபத்தில்  வெளியாகும் விஷால் படத்தை வெளியிட விடாமல் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக தகவல் கிடைத்துள்ளது.


இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் விஷால் மற்றும் பிரியா பவாணி சங்கர் இணைந்து நடிக்கும் திரைப்படம் ரத்னம் ஆகும். பல சர்ச்சைகளுக்கும் பல பிரச்சனைகளுக்கும் பிறகு வெளியாகும் இந்த திரைப்படத்தை வெளியிடுவதில் பிரச்சனை இருப்பதாக விஷால் கூறியிருப்பது பரபரப்பை ஏற்றப்படுத்தியுள்ளது.


இது தொடர்பாக விஷால் கூறுகையில் " ரத்னம் படத்தை திரையிட விடாமல் கட்டப்பஞ்சாயத்து செய்கின்றார்கள் எனக்கே இந்த நிலைமை என்றால் புதுமுக நடிகர்களின் கதி " என விஷால் கூறுகின்றார். சமீபத்தில் இவர் ரெட்ஜெயண்ட் நிறுவனத்துடன் தனக்கு பிரச்சனை இருப்பதாக ஓபனாக கூறியிருந்த நிலையில் இது காரணமாக இருக்கலாம் என பலராலும் கூறப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement