விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் டிசம்பர் மாதத்திற்கான புதிய கதைக்களம் வெளியாகி உள்ளது. தற்போது இது தொடர்பான புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி இணையத்தை கவர்ந்து வருகின்றது.
அதன்படி தற்போது வெளியான ப்ரோமோவில், மனோஜின் பழைய காதலி மீண்டும் என்ட்ரி கொடுக்கின்றார். அவர் முத்துவின் காரில் சவாரி சென்றதோடு மட்டுமில்லாமல் போலீஸ் ஸ்டேஷனுக்கும் செல்லுகின்றார்.
அங்கு ரோகினியும் மனோஜூம் நிற்பதை பார்த்துவிட்டு முத்துவிடம் வந்து நான் லைப்ல யார பாக்க கூடாது என்று நினைத்தேனோ அவர்களையே பார்த்து தொலைச்சிட்டேன் என்று ஆவேசத்தில் பேசுகின்றார். இதை கேட்டு முத்து யோசிக்கிறார்.
குறித்த போலீஸ் ஸ்டேஷனில் மனோஜ், முத்து மற்றும் மனோஜின் பார்க் நண்பர் நிற்கும் நிலையில் அவர்கள் வாங்கிய பேலஸ் தொடர்பில் புகார் அளிக்க சென்றிருக்கலாம் என்றே தோணுகின்றது. ஏற்கனவே மனோஜை ஏமாற்றும் நோக்கிலேயே பேலஸை திட்டம் போட்டு விற்கிறார்கள்.
தற்போது அவர்கள் போட்ட திட்டத்தின்படியே மனோஜ் காசை கொடுத்து இருப்பார். அதன் பின்பு அவர்கள் ஏமார்ந்த விடயம் தெரிந்திருக்கும். இதை தொடர்ந்து மனோஜூம் ரோகிணியும் போலீஸ் ஸ்டேஷனை நாடிய நிலையில், அங்கு எதிர்பாராத விதமாக ஜீவாவும் சென்றுள்ளார்.
எனவே இதுவரையில் ரோகினி ஆடிய கபட நாடகம் வெட்ட வெளிச்சம் ஆகுமா? அவரின் முகத்திரை கிழியுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!