பிரபல நடிகர் அல்லு அர்ஜூனை ஹைதராபாத் போலீசார் இன்று திடீரென்று கைது செய்த நிலையில் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு வந்த அடுத்த அதிர்ச்சி செய்தியாக இருக்கிறது. முழு விபரங்கள் இதோ..
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த புஷ்பா திரைப்படம் தொடர்ந்து அடுத்தடுத்து பல சிக்கல்களை கொடுத்து வருகிறது. கடந்த 4ம் தேதி படத்தின் பிரீமியர் காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் திரையிடப்பட்டது. இதனை பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன் சென்றார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற பெண் இறந்தார்.
இது தொடர்பாக தியேட்டர் உரிமையாளர், மேலாளர் மீது சிக்கடபள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அல்லு அர்ஜுனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் அல்லு அர்ஜுன் சிறையில் அடைக்கப்பட உள்ளார் என்ற செய்தி தற்போது காட்டு தீயாய் பரவி வருகிறது.
Listen News!