• Oct 23 2025

விஜய்யுடன் நடிக்க முடியாதெனப் பயந்தேன்! அவரை பார்த்துத்தான் வளர்ந்தேன்! மமிதா பைஜூ பேட்டி...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

ஹெச். வினோத் - விஜய் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் முதல் நடிகராக பாபி தியோல் இணைந்ததாக அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து, பூஜா ஹெக்டேவும் படத்தில் இருப்பதை அறிவித்தனர். இந்நிலையில் நடிகை மமிதா பைஜூ கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேசிய விடியோ வைரலாகியுள்ளது. நேர்காணல் ஒன்றில் மமிதா பைஜூ பேசியதாவது.


நடிகர் விஜய்யுடன் நடிக்க முடியாமல் போய்விடுமென நடிகை மமிதா பைஜூ பேசியுள்ள விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. நான் விஜய் சாருடன் ஒரு படமாவது நடிக்க வேண்டுமென நினைத்தேன். தமிழில் மற்றுமொரு நடிகருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது விஜய்யுடனும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்குமென நினைத்திருக்கிறேன். 


இனிமேல் அவர் நடிக்கவில்லையெனில் அதையெல்லாம் மிகவும் மிஸ் செய்வேன். நான் வளர்ந்ததே விஜய் சாரின் படங்களைப் பார்த்துதான். கில்லி படத்துக்கு நான் தீவிர ரசிகை என்றார். விஜய்யின் கடைசி படம் என்பதால் அவரது ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

Advertisement

Advertisement