அஜித் குமார் நடித்து வரும் "குட் பேட் அக்லி" படத்தில் தலைக்கு வில்லனாக நம்ம பிரசன்னா நடிக்கிறாராம் என தகவல் வெளியாகியுள்ளது. தன்னுடைய இன்ஸராக்கிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
"நம் அன்புக்குரிய தல அஜித் குமார் சாரின் படத்தில் நான் நடிக்கிறேன் என்கிற தகவல் உண்மை தான். என் கனவு நினைவாகிவிட்டது. மங்காத்தாவில் இருந்து ஒவ்வொரு முறையும் அஜித் சாரின் படங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும்போது நான் அதில் நடிப்பதாக இருந்தது. அவரின் ரசிகர்கள் தொடர்ந்து கணித்ததுடன், என்னை வாழ்த்தியும் வந்தார்கள்".
வாய்ப்புகள் தொடர்ந்து கைவிடப்பட்ட நிலையில் ஒரு வழியாக இம்முறை நான் குட் பேட் அக்லி படத்தில் நடிக்கிறேன். கடவுள், ஏகே சார், மைத்ரி மூவீஸ், சுரேஷ் சந்திரா சார் மற்றும் தலயுடன் அவர் படத்தில் என்னை பார்க்க விரும்பிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என கூறி இந்த பதிவினை போட்டுள்ளார்.
Listen News!