ஞானவேல் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் வேட்டையன். நடிகர் ரஜனிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புடன் இந்த படம் வரும் அக்டோபர் 10 - ம் தேதி வெளிவர உள்ள நிலையில், இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. தற்போது வேட்டையன் படத்திற்கு தடை விதிக்க கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்றத்திற்கு மதுரையை சேர்ந்த பழனிவேலு என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், 'படத்தில் இடம்பெற்றுள்ள என்கவுன்ட்டர் தொடர்பான வசனங்களை படம் ரிலீஸ்க்கு முன் நீக்க வேண்டும் அல்லது மியூட் செய்ய வேண்டும், அதுவரை இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்' என்று அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த வழக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதன் முடிவு என்னவாக இருக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!