கடந்த அக்டோபர் ஆறாம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 8ஐ இம்முறை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார். 24 போட்டியாளர்களுடன் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது பத்துப் போட்டியாளர்களே இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகின்றார்கள்.
இந்நிகழ்ச்சியில் தற்போது முத்துக்குமரன், அருண் பிரசாத், விஷால், பவித்ரா, மஞ்சரி, தீபக், ஜாக்குலின், சவுந்தர்யா, ராஜன், மற்றும் ராணவ் ஆகிய 10 போட்டியாளர்கள் மத்தியில் பிக் பாஸ் டைட்டிலுக்கான கடும் போட்டி நிலவுகின்றது.
இந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டு பினாலையே டாஸ்கில் ராஜன் வெற்றி பெற்றார். இதனால் முதலாவது ஆளாக அவர் பைனலுக்குள் நுழைந்துள்ளார். முத்துக்குமரன் 2 புள்ளிகள் வித்தியாசத்திலேயே முதல் இடத்தை நழுவ விட்டார்.
இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுள் டேஞ்சர் சோனில் உள்ள நான்கு போட்டியாளர்களின் விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த வாரம் டேஞ்சர் சோனில் மஞ்சரி, அருண், விஷால் மற்றும் பவித்ரா ஆகியோர் காணப்படுகின்றார்கள்.
இவர்களுள் மஞ்சரிக்கு மிகவும் கம்மியான வாக்குகள் கிடைத்துள்ளதால் அவர் இந்த வாரம் எலிமினேட் ஆவது உறுதி. டபுள் எவிக்ஷன் நடந்தால் அதில் பவித்ரா, அருண் எலிமினேட் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!