• Jan 19 2025

மாகாபா யாருக்கு சப்போர்ட் தெரியுமா? இந்த பதிலை யாருமே எதிர்பார்க்கலையே..!

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

சமூக வலைதள பக்கத்தில் தற்போது விஜய் டிவி பிரபலமான மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி தான் பேசு பொருளாக காணப்படுகின்றது. அதற்கு முக்கிய காரணம் விஜே பிரியங்கா தான் என்றும் அவர் மணிமேகலை போன்ற பலரை இல்லாமல் செய்துள்ளார் எனவும் தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

குக் வித் கோமாளி ஐந்தாவது சீசனில் தொகுப்பாளினியாக மணிமேகலை களமிறங்கி இருந்தார். இந்த சீசனில் போட்டியாளராக பங்கு பற்றியவர் தான் பிரியங்கா. ஆனாலும் இவர் தனது சமையல் வேலையை கவனிப்பதை விட்டுவிட்டு அடிக்கடி தொகுப்பாளினி வேலையையும் சேர்த்து செய்வதாக மணிமேகலை குற்றம் சாட்டியிருந்தார்.

அத்துடன் தனது வேலையை செய்ய விடாமல் அடிக்கடி இடையூறு செய்வதாகவும் இதனால் தன்மானத்தை இழந்து என்னால் இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்ற முடியாது என அதிரடியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் மணிமேகலை.

இதை தொடர்ந்து மணிமேகலை எடுத்த முடிவு சரிதான் என அவருக்கு ஆதரவாக பல குரல்கள் எழுந்து வருகின்றன. அதேபோல பிரியங்காவுக்கு எதிராகவும் பலர் தமது விவாதங்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் பிரியங்கா அடுத்தவரின் வளர்ச்சிக்கு உதவுவதாகவும் பழைய வீடியோக்களை மீண்டும் வைரல் ஆக்கி வருகின்றார்கள்.


இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் மாகாபா தனது கருத்தை முன் வைத்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில், இந்த நிகழ்ச்சி நடக்கும் போது நான் அதில் இல்லை என்பதால் நேரடியாக பார்க்காமல் கருத்தை கூற முடியாது.

அவர்கள் இரண்டு பேரும் அடித்துக் கொள்வதை சுட்டிக்காட்டிய மாகாபா, நாம ஒரு காட்டுக்குள்ள சென்று கொண்டிருக்கும்போது அங்கு இரண்டு யானைகள் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் அதை பார்த்து ஒதுங்கி சென்று விட வேண்டும். அதை சமாதானப்படுத்த முயன்றால் நம்மை நசுக்கி விடும் என்று தெரிவித்துள்ளார். 

அதன்படி இந்த விஷயத்தை வெளியில் இருந்து வேடிக்கை பார்ப்பதே நல்லது எனக்கூறி முடித்துள்ளார். மேலும் இந்த விஷயம் நாட்டிற்கு மிகவும் முக்கியமான விஷயம் எல்லாம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். இதனால் அவர் யாருக்கும் சப்போர்ட் பண்ணாமல் நைசாக நழுவி உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement