• Jan 24 2025

மதகஜ ராஜாவின் மாபெரும் வெற்றி... 1160 கோடிக்காக தூசு தட்டப்படும் 15 படங்கள்.?

Aathira / 6 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து வெளியான திரைப்படம் தான் மதகஜ ராஜா. இந்த படத்தை சுந்தர் சி இயக்க அதில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி, மனோபாலா, மணிவண்ணன் உட்பட பலர் நடித்திருந்தார்கள்.

2012 ஆம் ஆண்டு எடுத்து முடிக்கப்பட்ட மதகஜராஜா திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக இருந்தது. ஆனாலும் நிதி பிரச்சனை காரணமாக இந்த படம் கிடப்பில் போடப்பட்டது. அதன் பின்பு கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து எல்லா பிரச்சினைகளும் முடிவுக்கு வந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியானது.

2025 ஆம் ஆண்டு பொங்கல் ரேஸில் வெளியான படங்களில் மதகஜராஜா திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்துடன் பத்துக்கு மேற்பட்ட படங்கள் வெளியான போதிலும் மதகஜ ராஜா திரைப்படமே பொங்கல் வின்னராக காணப்பட்டது.

இந்த நிலையில், மதகஜராஜா படத்தை தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டுள்ள சுமார் 15 படங்கள் தூசு தட்டப்பட்டு மீண்டும் ரிலீசுக்கு தயாராகி வருவதாக வலைப்பேச்சு அந்தணன்  தெரிவித்துள்ளார்.


அதன்படி மதகஜ ராஜா திரைப்படம் வெளியாவதற்கு முக்கிய காரணமே திருப்பூர் சுப்ரமணியம் தான். அதனால் அவர் மேலும் கிடப்பில் போடப்பட்டுள்ள துருவ நட்சத்திரம், சதுரங்க வேட்டை 2,   அக்னிச் சிறகுகள், நரகாசுரன் உட்பட சுமார் 15 படங்களை ரிலீஸ் செய்வதற்கு திட்டமிட்டுள்ளாராம்.

இந்த படங்களுக்காக பைனான்சியர்கள் கொடுத்த பைனான்ஸ் தொகை  மட்டும் கிட்டத்தட்ட 1160 கோடி என கூறப்படுகிறது.. இதனால் இந்த படங்களை வெளியிட்டு இதனால் முடங்கி கிடக்கும் பணத்தை மீட்பதற்கு  திருப்பூர் சுப்ரமணியம் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

Advertisement

Advertisement