97 ஆவது ஆஸ்கார் விருதுகள் விழா வழங்கும் நிகழ்ச்சி எதிர்வரும் மார்ச் மாதம் இரண்டாம் தேதி நடைபெற உள்ளது. குறித்த ஆஸ்கார் விருதுகளில் இறுதி பட்டியலில் அனுஜா என்ற இந்திய குறும் படம் லைவ் ஆக்சன் ஷார்ட் பிலிம் பிரிவில் இடம் பெற்றுள்ளது.
குறித்து ஆஸ்கர் ரேஸில் லபடா லேடிஸ் திரைப்படம் தேர்வாகும் என கணிக்கப்பட்டது. ஆனால் அந்த படம் தேர்வாகவில்லை. அதேபோல மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையில் காணப்பட்ட ஆல் வி இமேஜின் அஸ் லைட் என்ற திரைப்படமும் தேர்வு செய்யப்படவில்லை.
இந்த நிலையில், அனுஜா என்ற இந்திய குறும்படம் லைவ் ஆப்ஷன் ஷார்ட் பிலிம் பிரிவில் இறுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மொத்தமாகவே 180 குறும் படங்களுடன் போட்டியிட்ட அனுஜா குறும்படம், குழந்தை தொழிலாளர்களின் பிரச்சனையை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அளவில் ஆஸ்கார் பட்டியலில் எந்தப் பிரிவிலும் வேறு எந்த படமும் இடம்பெறவில்லையாம்.
அனுஜா குறும்படத்தை தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தின் தயாரிப்பாளர் நிர்வாக தயாரிப்பாளராக செயல்பட்டுள்ளதோடு, அதில் நடிகை பிரியங்கா சோப்ராவும் இந்த படத்தின் தயாரிப்பு குழுவில் இடம் பெற்றுள்ளார். இந்த படம் கூடிய விரைவில் நெப்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Listen News!