• Jan 18 2025

'கயல்விழியின்' மதுரை பயணம் கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ள வீடியோ !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பில் நாளை வெளியாகிறது "ரகு தாத்தா" திரைப்படம். தேசிய விருது பெற்ற நடிகையான கீர்த்தி தன்னால் முடியும் எனும் நம்பிக்கையுடன் சமூக அக்கறையுடன் கூடிய ஓர் கதையில் முன்னணி கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.


மொழி திணிப்பிற்கு எதிரான இந்தப் படத்தை கே.ஜி.எப்  படத்தினை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க சுமன் குமார் எழுதி இயக்கியுள்ளார்.அண்மையில் வெளியாகியிருக்கும் ட்ரைலர் மற்றும் பாடல்கள் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.


"ரகு தாத்தா" படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக மதுரை சென்ற கீர்த்தி சுரேஷ் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் மேற்கொண்டார் என அறிந்திருந்தோம். இந்நிலையில் தனது மதுரை பயணத்தின் சிறு வீடியோவை "பாண்டிய நாட்டிலிருந்து உங்கள் கயல்விழி பாண்டியன்" என்ற பதிவுடன் தனது இன்ஸாட பக்கத்தில் பகிந்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

Advertisement

Advertisement