• Mar 14 2025

எங்க ஏரியால வந்து யாருகிட்ட! கர்நாடகாவில் சரிந்த கங்குவா! காரணம் கன்னட சூப்பர் ஸ்டார்!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூரியா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் வசூலில் மாஸ் காட்டி வந்தாலும் கலவையான விமர்சனங்களினால் தற்போது முன்னேறமுடியாமல் கொஞ்சம் பின்வாங்கி உள்ளது. இந்நிலையில் கங்குவாவிற்கு போட்டியாக படத்தை ரிலீஸ் செய்து வசூலில் மாஸ் காட்டி வருகிறார் கன்னட திரையுலகில் சூப்பர்ஸ்டார் ஷிவ ராஜ்குமார். 


சூர்யா நடித்த கங்குவா படம் பான் இந்தியா அளவில்  ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்திற்கு கர்நாடகாவிலும் எதிர்பார்ப்பு இருந்ததால் அங்கும் அதிகளவிலான தியேட்டர்களில் கங்குவாவை ரிலீஸ் செய்தனர். கங்குவா படத்துக்கு பயந்து சில கன்னட படங்கள் தள்ளிவைக்கப்பட்டாலும், அதை எதிர்த்த ஒரே ஒரு நடிகர் ஷிவ ராஜ்குமார் தான். அவர் நடித்த "பைரதி ரனகள்" என்கிற திரைப்படம் கங்குவாவுக்கு போட்டியாக ரிலீஸ் ஆனது. 


கங்குவா படத்தை எதிர்த்து படத்தை வெளியிட்ட ஷிவ ராஜ்குமாருக்கு பாக்ஸ் ஆபிஸிலும் ஜாக்பாட் அடித்துள்ளது. ஏனெனில் கங்குவா படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால் அப்படத்தை கர்நாடகாவில் மக்கள் பார்ப்பது குறைந்து விட்டது. அதனால்  இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டையாடி வருகிறது. 

Advertisement

Advertisement