தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் ஒரு சில படங்கள் மட்டுமே மக்களின் கவனம் ஈர்த்த படங்களாகவும் வசூலில் சாதனை படைத்த படங்களாகவும் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் வெளியான தமிழ் படங்கள் பெரிதாக ஈடு கொடுக்காத நிலையில் பிற மொழியில் வெளியான திரைப்படங்கள் சக்கைப் போடு போட்டது.
இதை தொடர்ந்து சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை 4 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அது போலவே சூரி நடிப்பில் வெளியான கருடன் திரைப்படம், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களின் வரவேற்பை பெற்றன.
எனினும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று தோல்வியடைந்தது. அதேபோல தங்கலான், கோட் உட்பட தற்போது கங்குவா திரைப்படம் போன்ற பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை என விமர்சனங்கள் குவியத் தொடங்கின.
இந்த நிலையில், தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் எஸ். லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் வெளியான அட்டக்கத்தி திரைப்படம் மீண்டும் திரை அரங்குகளில் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது புதிய படங்களுக்கு எதிர்பார்த்த அளவில் வரவேற்பு கிடைக்காததால் லப்பர் பந்து படத்தை சில திரையரங்குகளில் மீண்டும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாம்.. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டக்கத்தி தினேஷ் இணைந்து நடித்திருந்தார்கள்.
கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது இந்த திரைப்படத்தை மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!