• Jan 19 2025

’கனா காணும் காலங்கள்’ பிரபலத்தின் மனைவி கர்ப்பம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’கனா காணும் காலங்கள்’ முதல் சீசனில் நடித்த தீபிகாவுக்கும் டான்ஸ் இயக்குனர் மனோஜ் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் அதே ’கனா காணும் காலங்கள்’ தொடரில் நடித்த நரேஷ் என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாதவி என்பவரை திருமணம் செய்த நிலையில் தற்போது மாதவி கர்ப்பமாக இருக்கிறார்.

இது குறித்து இருவருமே தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து நான் + நீ + குழந்தை = மூவர் என பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நரேஷ், மாதவி ஆகிய இருவரும் காதலித்து வந்த காலத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை இணைந்தே பதிவு செய்தனர். ஏற்கனவே காதலிப்பதை வெளிப்படையாக இருவரும் அறிவித்திருந்தால் கடந்த ஆண்டு இவர்களுடைய திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடந்தது. இந்த நிலையில் தற்போது மாதவி கர்ப்பமாக இருப்பதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

`கனா காணும் காலங்கள்' டீமில் உள்ளவர்களுக்கு அடுத்தடுத்து திருமணமாகி வரும் நிலையில் அடுத்த திருமணம் யாருக்கு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



Advertisement

Advertisement