சமீபத்தில் வெளியான பிரபாஸ் நடித்த ’கல்கி 2898 ஏடி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று உள்ளது என்பதும் இந்த படம் நான்கே நாட்களில் 555 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 
இந்த நிலையில் இந்த படத்தில் வில்லனாக கமல்ஹாசன் நடித்துள்ள நிலையில் முதல் பாகத்தில் கமல்ஹாசனுடைய காட்சிகள் வெறும் 19 நிமிடங்கள் மட்டுமே இருப்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால் அதே நேரத்தில் இரண்டாம் பாகத்தில் கமல்ஹாசனின் காட்சிகள் அதிகம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது 
இந்த நிலையில் ’கல்கி 2898 ஏடி’ திரைப்படத்தில் நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் உள்ள சில முக்கிய நபர்கள் இந்த படத்தில் கமல்ஹாசனின் 20 கோடி ரூபாய் சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி என்ற அளவில் அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டதாகவும் கூறி உள்ளனர். 
ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க கமல்ஹாசனுக்கு 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வழங்கப்படலாம் என்றும் ஆனால் முதல் பாகத்தில் அவருக்கு குறைவான சம்பளம் தான் வழங்கப்பட்டது என்றும் கூறுகின்றனர். இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும் இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!