• Jan 18 2025

நாளை முதல் ஓ.டி.டி யில் வெளியாகிறது சூரியின் கருடன் !

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

"வெண்ணிலா கபடி குழு" திரைப்படத்தில் பரோட்டா காமெடி காட்சியின் மூலம் அறியப்பட்டு அடுத்தடுத்து நகைச்சுவை கதாபாத்திரங்களில் தனக்கான ஒரு இடத்தை பிடித்து முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து பணியாற்றி தனக்கான ஒரு ரசிகர் படையை உருவாக்கிக்கொண்டார் நடிகர் சூரி.

Parotta Soori Super Hit Comedy | Vellai ...

நகைசுவை நடிகனுக்குள் உள்ள ஒரு பெரும் நடிகனை "விடுதலை" திரைப்படத்தின் ஊடக கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார் இயக்குனர் வெற்றி மாறன்.அது வரை நகைச்சுவை நடிகன் சூரியை பிடிக்காதவர்களுக்கும் கதாநாயகன் சூரியை பிடித்தது என்றே சொல்லாம்.

stills feat. Vijay Sethupathi, Soori ...

விடுதலையை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தமானார் சூரி.அந்த வகையில் வெற்றி மாறன் தயாரிக்க  ஆர்.எஸ்.துரை செந்தில்குமாரால் இயக்கப்பட்ட "கருடன்" படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருந்தார் சூரி.

Garudan Movie (2024) Cast, OTT, Release ...

இந்நிலையில் பெரும் வரவேற்புக்கு மத்தியில் நேர்மறையான விமர்சனகளுடன் குடும்ப பார்வையாளர்களை வெகுவாய் கவர்ந்த "கருடன்" படமானது நாளை முதல் ஓ.டி.டி  தளங்களில் வெளியாவதாக உத்தியோகபூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன.


Advertisement

Advertisement