• Jul 04 2025

லேடி சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தை இயக்க போவது இந்த இயக்குனரா ?

Thisnugan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரைக்கு அறிமுகமாகி தொடர்ந்து தன் திறமையால் முன்னேறி இன்று வரை தமிழ் சினிமாவில் நிலைத்திருக்கும் நயன்தாராவுக்கு கிடைத்திருக்கும் சரியான இடம் தான் "லேடி சூப்பர் ஸ்டார்" எனும் பட்டம்.

Nayanthara Age, Wiki, Bio, Height ...

தொடர் திரை வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் நயன்தாராவின் சிறந்த முடிவான பெண் பாத்திர முக்கியத்துவ கதைகளை தேர்வு செய்து நடித்தது தான் இன்று வரை திரையுலகில் அவருக்கேயான தனித்துவ இடத்தை கொடுத்தது எனலாம்.


அண்மையில் இவரின் நடிப்பில் வெளிவந்த "அன்னபூரணி" திரைப்படம் குறிப்பாக பெண் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது ரசிகர்கள் கொண்டாடும் படியான ஒரு தகவல் வெளியாகியுள்ளது.நயன்தாராவின் அடுத்த படத்தை "மகாராஜா" பட இயக்குனர்  நித்திலன் சுவாமிநாதன் இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement