• Jan 19 2025

அப்பா - மகள்ன்னா இப்படித்தான் இருக்கணும்.. கமல்ஹாசன் - ஸ்ருதிஹாசனின் க்யூட் வீடியோ..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் மற்றும் அவரது மகள் ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் ’இனிமேல்’ என்ற ஆல்பம் குறித்து உரையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அப்பா மகள் என்றால் இப்படித்தான் தோழர்கள் போல் இருக்க வேண்டும் என்று கமெண்ட் பதிவாகி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் தயாரித்த ’இனிமேல்’ என்ற ஆல்பம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த ஆல்பத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்திருந்த நிலையில் இருவருக்கும் கெமிஸ்ட்ரி பற்றி கொண்டதாக வதந்திகளும் வெளியானது என்பதை பார்த்தோம்.

கமல்ஹாசன் எழுதிய பாடல் வரிகளுக்கு ஸ்ருதிஹாசன் இசையமைத்து அவரே லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து நடித்த இந்த ஆல்பம் யூடியூபில் ஒரு கோடிக்கு மேல் பார்வையாளர்கள் பெற்றுள்ளது என்பதும் இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த பாடல் உருவான விதம் , இந்த பாடலின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட அனுபவம் ஆகியவை குறித்து கமல்ஹாசன் மற்றும் ஸ்ருதிஹாசன் உரையாடும் வீடியோ ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வீடியோவின் முன்னோட்டம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதன் முழு வீடியோ நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வீடியோவை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருப்பதாக தெரிகிறது.

இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ்கள் குவிந்து வரும் நிலையில் ’அப்பா மகள் என்றால் இப்படித்தான் நண்பர்கள் போல் இருக்க வேண்டும்’ என்றும் ’பார்க்கவே கியூட்டாக இருக்கிறது என்றும் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.



Advertisement

Advertisement