• Jan 09 2026

பிரபாஸ் - அமிதாப் மோதல்.. கமல்-தீபிகா வேற லெவல்.. ‘கல்கி 2898ஏடி’ டிரைலர்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

பிரபாஸ் நடித்த ’கல்கி 2898 ஏடி’ என்ற திரைப்படம் வரும் 27ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு நிமிடத்திற்கு மேல் இருக்கும் இந்த ட்ரெய்லரில் இதுவரை இந்திய சினிமாவில் பார்க்காத வகையில் உள்ள கிராபிக்ஸ் காட்சிகள் அட்டகாசமாக உள்ளது.

குறிப்பாக அமிதாப்பச்சன் மற்றும் பிரபாஸ் ஆகிய இருவரும் மோதும் காட்சிகள் படத்தில் வேற லெவலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ட்ரெய்லரிலிருந்து தீபிகா படுகோனுக்கு இந்த படத்தில் மிக முக்கிய கேரக்டர் என்றும் தெரியவந்துள்ளது.



வழக்கம் போல் கமல்ஹாசனின் அட்டகாசமான மேக்கப், திஷா பதானியின் அதிரடி ஆக்சன் காட்சிகள், பிரபாஸின் ஆக்ரோஷமான காட்சிகள், இந்திய திரை உலக ரசிகர்கள் இதுவரை பார்க்காத கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் என ஒவ்வொரு காட்சியும் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக இரண்டு பிரிவினர் மோதும் போர் காட்சியை பார்க்கும் போது இந்த படத்திற்காக கிராபிக்ஸ் கலைஞர்கள் எந்த அளவுக்கு கடுமையாக உழைத்து உள்ளார்கள் என்பது தெரிய வருகிறது. மொத்தத்தில் ’கல்கி 2898 ஏடி’ திரைப்படம் ஒரு விஷுவல் ட்ரீட் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Advertisement

Advertisement