• Jan 19 2025

’கோட்’ திரைப்படம் 2050ல் நடக்கும் கதையா? கிளிம்ப்ஸ் வீடியோவில் இருந்து கண்டுபிடித்த ரசிகர்கள்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்த ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இன்று அதிகாலை கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதும் இந்த வீடியோவில் உள்ள ஒவ்வொரு காட்சிகளும் விஜய் ரசிகர்கள் திரும்பத் திரும்ப பார்த்து சில விஷயங்களை கண்டுபிடித்துள்ளார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.



குறிப்பாக இந்த வீடியோவில் PEAK OF IT BILLION BY 2050 என்று ஒரு ஷாட்டில் இருப்பதை அடுத்து நிச்சயம் இது ஒரு டைம் டிராவல் கதை என்றும், 2050 ஆம் ஆண்டு நடக்கும் கதை என்பதும் தெரிய வருகிறது. ஏற்கனவே இந்த படம் டைம் டிராவல் கதை என்று செய்திகள் கசிந்த நிலையில் தற்போது அது இந்த ஒரே ஒரு ஷார்ட் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ரஷ்யாவில்  தான் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது என்ற நிலையில் இதுவரை தமிழ் படங்களில் பார்க்காத ரஷ்யாவின் பல பகுதிகள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.  சித்தார்த் நுனி கேமரா ரஷ்யாவை படம் பிடித்து இருக்கும் விதத்தை பார்க்கும் போது ஹாலிவுட் தரத்திற்கு ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது என்பது தெரிய வருகிறது.



யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை, ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து வெங்கட் பிரபு எடுத்த விதம், கடைசி காட்சியின் விஜய்யின் ஐடி கார்டு மற்றும் விஜய்யை குறிவைத்து காணப்படும் காட்சி, கார் கண்ணாடியில் இருந்து விஜய் தோன்றும் காட்சி, இரண்டு விஜய்கள் சேர்ந்து பைக்கில் செல்லும் காட்சி, நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விஜய் அதிரடியாக ஸ்டண்ட் செய்யும் காட்சி என இந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் உள்ள ஒவ்வொரு காட்சியை பார்க்கும் போதும் தமிழ் சினிமாவுக்கு இது ஒரு வித்தியாசமான படம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement