• Jan 19 2025

நடுத்தெருவுக்கு வீசப்பட்ட ஈஸ்வரி.. மனசாட்சியே இல்லாத கோபி! அதிர்ச்சியில் பாக்கியா

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  கிச்சனில் செல்வியும் பாக்கியாகவும் இருக்க, பாக்கியா ஈஸ்வரியை  நினைத்து சிலை போல நிற்கிறார். அங்கு எழிலும் வந்து பாக்கியாவிடம் கதை கேட்க, அவர் ஈஸ்வரியை நினைத்து அசையாமல் இருக்க, எழில் அவரை பிடித்து அசைத்து சமாதானம் செய்கிறார். 

இதைத்தொடர்ந்து ராதிகா வீட்டுக்கு வர, அங்கு கதவை திறக்கும் போது ஈஸ்வரி ஹாலில் உட்கார்ந்து இருக்கின்றார். உள்ளே வந்த கமலா நீ என்னும் போகலையா? என்று கண்டபடி ஈஸ்வரியை  அவமானப்படுத்துகிறார். ஆனாலும் கோபி இதையெல்லாம் பார்த்துக் கொண்டு பேசாமல் இருக்க, ராதிகாவும் நீங்கதான் என் குழந்தையை கொன்னுட்டீங்க என்று அவரும் வெளியே போகுமாறு திட்டுகிறார்.

இதனால் ஈஸ்வரி அழுது கொண்டே கோபியிடம் சென்று அவங்க என்ன வேணா கதைக்கட்டும் ஆனால் நான் தப்பே பண்ணல என்று நீ சொல்லு என்று சொல்ல, நான் என்ன சொல்ல அதான் நீங்க எல்லாம் பண்ணி முடிச்சிட்டீங்களே, நீங்க ஆசைப்பட்ட படியே குழந்தை இல்லாம போயிட்டு, அந்த குழந்தையை கொன்னுட்டிங்களே என்று அவரும் வார்த்தைகளை விடுகிறார்.

அங்கிருந்த கமலா அந்த பொம்பளைய வெளிய போக சொல்லுங்க, அவ இருக்க வீட்ல ராதிகா இருக்க மாட்டான்னு சொன்னா தானே என சொல்ல, கோபியும் ஈஸ்வரியை வெளியே போகுமாறு சொல்லிவிடுகிறார்.


இந்த அதிர்ச்சியில் ஈஸ்வரி என்ன செய்வது என்று தெரியாமல் ரூமுக்கு போய் இருந்து நினைத்து அழ, வெளியில் இருந்த கமலா உள்ள என்ன பண்ணிட்டு இருக்க? வீட்டை விட்டுப் போ என கத்துகிறார்.

இதைத்தொடர்ந்து ஈஸ்வரி தனது பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்புகிறார். வாசலில் நின்று அவர் அழுது கொண்டு இருக்க, மறுபக்கம் பாக்யா ரொம்ப அப்செட்டாக இருக்கின்றார். அந்த நேரத்தில் ஈஸ்வரி கூப்பிட்டது போல அவருக்கு தோண, வெளியே வந்து பார்க்கிறார்.

அப்போது ஈஸ்வரி ராதிகா வீட்டிற்கு வெளியே பெட்டியுடன் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அங்கு சென்று என்ன நடந்தது என்று கேட்க, ஈஸ்வரி சொல்ல முடியாமல் அழுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement