தலைவர் ரஜினிகாந்த் இன்று தனது 74வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்நிலையில் இவர் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் தொடர்பான சமீபத்தைய செய்தியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார். என்ன விடையம் என்பது குறித்து பார்ப்போம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தானில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ராஜனிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு, மாலை 6 மணிக்கு ஒரு சிறப்பு காட்சி வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். மேலும் லோகேஷ் கனகராஜுன் தனது டுவிட் தளத்தில் இன்று மாலை 6மணிக்கு என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரஜனிகாந்த் நடிக்கும் இப்படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, அமீர்கான், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் மற்றும் பல முக்கிய நடிகர்கள் சிறப்பான வேடங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் மூலம் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட கூலி திரைப்படம் அனிருத் ரவிச்சந்தரின் இசையில் திரையில் விருந்து படைக்க உள்ளது. தற்போது வெளியாக இருக்கும் கூலி அப்டேட்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்
இன்று மாலை 6 மணி.. Get ready for the Deva's birthday treat!
6 PM 🔥😎 #Coolie@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @anbariv @girishganges @philoedit @Dir_Chandhru @PraveenRaja_Off #HappyBirthdaySuperstarRajinikanth #HBDSuperstarRajinikanth pic.twitter.com/fGnoLhqQhL
Listen News!