• Jul 09 2025

அவங்க காலை என் மூஞ்சிமேல வச்சாங்க… நயன்தாரா குறித்து ஜோகிபாபு வெளியிட்ட அதிரடிக் கருத்து.!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இன்று ரசிகர்கள் மனதில் உண்மையான காமெடி கிங் என அழைக்கப்படுவது யாரென கேட்டால், பலர் உடனே சொல்லும் பெயர் ஜோகி பாபு தான். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தனது தனிப்பட்ட நகைச்சுவை பாணியால் அந்த கேரக்டரை உயிரோட்டமுடன் மாற்றும் இவர், சமீபத்தில் ஒரு நேர்காணலில், ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவுடன் நடித்த அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.


2018ம் ஆண்டு வெளியான ‘கோலமாவு கோகிலா’,படத்தில் நயன்தாரா தனது தனிப்பட்ட ஸ்டைலில் நடித்திருந்தார். இதில் ஜோகி பாபு, நயன்தாராவின் படத்திற்கு முக்கியமான காமெடியனாக இருந்தார். அப்படத்தில் இடம்பெற்ற வேன் காட்சி (van comedy scene) பலருக்கும் ஞாபகம் இருக்கக் கூடும்.

அந்தக் காட்சிகள் குறித்து ஜோகி பாபு,"வேன் காட்சியில் ஸ்பீட் பிரேக் அடிக்கும் போது திடீரெனு பார்த்தா அவங்க கால் என் மூஞ்சி மேல வச்சிருப்பாங்க. அதை அவங்க பண்ணவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க. ஆடியன்ஸ் சிரிப்பாங்க பரவாயில்ல பண்ணுங்க என்று நயனை பண்ண வைத்தோம். 


அந்த காட்சிகள் 7,8 தடவை டேக் எடுத்திருப்போம். ஆனால் நயன் ஒரு டேக்கில் கூட அவங்கட காலை கீழே வைக்கல. வாஸ்லின் தடவிட்டு காலை மேலேயே வச்சிருந்தாங்க. ஏனென்றால் மண்ணு என் மூஞ்சில படக்கூடாதுன்னு அவங்க அப்புடி பண்ணாங்க. அத்தகைய சிறந்த நடிகை நயன்தாரா." என்று ஜோகி பாபு புகழ்ந்திருந்தார். 

ஜோகி பாபு – நயன்தாரா இடையே நடந்த இந்த உண்மை சம்பவம், வெறும் சினிமா காட்சிகளை அல்ல, மனிதர்ககளின் உள்ளத்தின் அழகை வெளிக்காட்டுகிறது. நயன்தாரா ஒரு பெரிய நடிகை என்பதற்கு இதுவே ஒரு அழகான சான்றாகவும் கருதப்படுகின்றது.

Advertisement

Advertisement