• Jul 10 2025

எல்லோரையும் ஒரே மாதிரி நடத்த மாட்டாங்க...!மாரி செல்வராஜ் பற்றி கூறிய ஆர்.எஸ்.கார்த்திக்..!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம்  வருபவர் மாரி செல்வராஜ் இவர் பல திரைப்படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நின்று விட்டார்.இந்த நிலையில் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற திரைப்படங்களை இயக்கி உள்ளார். தற்போது விமர்சித்து  நடிகர் ஆர்.எஸ். கார்த்திக் கூறிய விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


பரியேறும் பெருமாள் திரைப்படத்தினை தியேட்டரில் பார்த்தாகவும் தனக்கு ரொம்ப பிடித்து இருந்ததாகவும் கூறியிருந்தார் . இதனைத் தொடர்ந்து " கர்ணன்" திரைப்படத்தில் தனக்கு தெரிந்த நண்பர்கள் நடித்தது இருந்ததாகவும் அப்போது தனுஷ் சூட் முடிந்து பிறகு கேரவன் சென்று விடுவார் என்று நண்பர்கள் கூறுவார்கள் என்று கூறினார் . 


மேலும்  கூறுகையில்  திருநெல்வேலி பக்கம் என்பது சரியான வெயில் அதிகம் என்பதால் இந்த பசங்க நிழலில் இருப்பார்கள் .அப்போது மாரி செல்வராஜ் டேய்  வந்து வெயில்ல நில்லுடா பெரிய மகாராஜா வீட்டு பிள்ளைகள் இவங்க என்று சொல்லுவார்கள்  எனக் கூறிய இருந்தார். 


இந்த நிலையில் " நீங்க புரட்சி மற்றும் சமத்துவம் பற்றித்தானே  திரைப்படம் எடுக்கின்றீங்க". அப்ப ஏன் எல்லேரையும் ஒரே மாதிரி நடந்த மாட்டேங்கறீங்க உங்க படத்தில் எடுப்பதை நீங்களே பின்பற்றுவது கிடையாது. அதன் பிறகும் ஏன் திரைப்படம் எடுக்கின்றீங்க? என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.  



Advertisement

Advertisement