தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் சிலம்பரசன். இவர் டி.ஆர் ராஜேந்திரன் மகன் ஆவார். இதுவரையில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் சிம்பு. அதற்கு இடையில் இரண்டு காதல் தோல்விகளையும் சந்தித்தார்.
இவரின் இரண்டாவது காதல் தோல்விக்கு பிறகு ஆன்மீக வழியில் சென்றார். இதனால் சினிமாவில் முற்றாக விலகினார். ஆனாலும் ரசிகர்கள் சிம்பு எப்போதும் மீண்டும் படத்தில் நடிக்க போகின்றார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்தனர்.
d_i_a
ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்பவே மீண்டும் அதிரடியாக கம்பேக் கொடுத்தார். அதன்படி வந்தா ராஜாவா தான் வருவேன், செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் அதில் அவரின் உடற்பருமனை பார்த்து பலரும் கிண்டல் அடித்தனர். இதனால் உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் படத்தில் அட்டகாசமாக நடித்தார்.
இதை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல படமும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தக்லைப் மற்றும் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் சிம்பு இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். அத்துடன் இவர் நடித்து வரும் படங்களின் சிறப்பு போஸ்டர்களும், வீடியோக்களும் வெளியாகி வைரலாகியுள்ளன.
இதே வேளை சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்றைய தினம் அவர்கள் வீட்டுக்கு முன்னால் ரசிகர்கள் கூடி கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். ஆனாலும் சிம்புவை காண முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளனர். இவர்களுடன் போலீசாரும் அவர்களுடைய பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Listen News!