• Jan 19 2025

ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டும், இல்லாட்டி ஃபீல்ட் அவுட் தான்.. ஜெயம் ரவியின் திக் திக் நாட்கள்..

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் ஜெயம் ரவி தனி ஹீரோவாக நடித்து வெற்றி படம் கொடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி உள்ள நிலையில் அவர் தற்போது ஒரு வெற்றி படத்தை கொடுத்து ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதாகவும் இல்லாவிட்டால் அவரது மார்க்கெட் படிப்படியாக இறங்கி ஒரு ஃபீல்ட் அவுட் ஆக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ என்ற திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் தான் அவர் தனி ஹீரோவாக நடித்து வெற்றி பெற்ற கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ’பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்கள் வெளியாகி வெற்றி பெற்றாலும் அது ஒரு மல்டி ஸ்டார் படம் என்பதால் அந்த படத்தின் வெற்றியில் ஜெயம் ரவியின் பங்கு மிகவும் குறைவுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

’கோமாளி’ படத்திற்கு பிறகு ஜெயம் ரவி தனி ஹீரோவாக நடித்த ’பூமி’ ’அகிலன்’ ’இறைவன்’ ஆகிய மூன்று படங்களும் படுதோல்வி அடைந்ததை அடுத்து இந்த வாரம் வெள்ளிக்கிழமை அவர் நடித்த ’சைரன்’ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படம் வெற்றி பெற்றால் மட்டுமே அவரது மார்க்கெட் நிலைக்கும் என்பதால் அவர் இந்த படத்திற்காக தீவிரமாக ப்ரமோஷன் செய்து வருகிறார் என்றும் இந்த படத்தை வெற்றி படமாக்க வேண்டும் என்று அவர் கடுமையாக உழைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த படமும் தோல்வியடைந்தால் அவர் தற்போது நடித்து வரும் படங்களின் சம்பளம் குறைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது ஏற்கனவே அவர் ’பிரதர்’ ’ஜெனி’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து வரும் நிலையில் ’சைரன்’ தோல்வி அடைந்தால் அந்த படங்கள் முடங்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே  ஜெயம் ரவி ஒரு வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் இனிவரும் நாட்கள் அவருக்கு திக்திக் நாட்களாகவே இருக்கும். 

Advertisement

Advertisement