• Jan 19 2025

சத்யாவின் கையை உடைத்த முத்து! கோவத்தின் உச்சியில் மீனா? வீடியோ ஆதாரத்தை வைத்து பக்கா பிளான் போட்ட செல்வம்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை.

இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட்  வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

செல்வம் விஷயத்தில் முத்துவும் சத்யாவும் மோதிக்கொள்ள, மாமா அவன் பிரண்டு அவனை அடிக்காத என்று சட்டையை பிடிக்க, என் மேலேயே கைய வைக்கிறியா என்று முத்து சத்யாவை போட்டு அடித்து அவரது கையை முறுக்கி விடுகிறார்.

பிறகு செல்வம் வந்து முத்துவை தடுத்து நிறுத்தி, சத்யாவை நீ போடா என்று அனுப்பி வைக்கிறார். அதன் பிறகு ஹாஸ்பிடலுக்கு  போகலாம் என்று சத்யாவை சிட்டி கூப்பிட, கொஞ்ச நேரத்துல இது  சரியாகிவிடும் என்று இருக்கிறார். அதன் பிறகு சத்யாவை வீட்டில் வெளியே கொண்டு விட்டுச் செல்கிறார் சிட்டி.

வீட்டுக்கு போன் சத்யா வலியால் துடிக்க, மீனாவின் அம்மா என்ன ஆச்சு என்று கேட்க, பைக்கில் இருந்து கீழே விழுந்ததாக சத்யா சொன்னதும் ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.

மறுபக்கம் முத்துவிடம் பேசிய செல்வம், என்ன தான் இருந்தாலும் நீ சத்யாவை அடிச்சு இருக்கக் கூடாது, அவன் உனக்கு மச்சான் இனி என்னென்ன பிரச்சனை நடக்கும் என்று தெரியல என்று சொல்ல, சத்யாவின் வீடியோ ஆதாரத்தை காட்டி கோபப்படுகிறார் முத்து.


சத்யா வீட்டுல எல்லாருமே பெரிய நம்பிக்கை வச்சிருக்காங்க. இந்த விஷயத்தை சொல்லலாம்னு தான் அங்க போன, ஆனா அத்தை பேசுவதை கேட்டுவிட்டு ஒன்றுமே செய்ய முடியல. அவங்க மொத்த நம்பிக்கையும் சத்யா மேல  தான் இருக்குது. 

எங்கட வீட்டுல இந்த விஷயம் தெரிஞ்சா, எங்க அம்மா மீனாவ  வீட்ல இருக்கே விட மாட்டாங்க. இந்த விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது அதுதான் எல்லாருக்கும் நல்லது. ஸ்டூடியோவில் வீடியோவ டெலிட் பண்ண சொல்லிட்டேன். 

நானும் டெலிட் பண்ண போறேன் என்று போனை எடுக்க, வேணாம் சத்யாவை திருத்த இந்த ஆதாரம் ரொம்ப முக்கியம் என்று செல்வம் சொல்கிறார்.

அடுத்ததாக மீனா முத்துவுக்கு போன் போட்டு சத்யா அடிபட்ட விஷயத்தை சொல்ல, நான் இப்ப சவாரி போயிட்டு இருக்கேன் என்னால வர முடியாது நீயே பார்த்துக்கொள் என்று சொல்ல, மீனா அதிர்ச்சி அடைகிறேன்.

அதைவிட உங்களுக்கு சவாரி முக்கியமா என மீனா கேட்க, எனக்கு என் தம்பி அடிப்பட்டிருந்தாலும் சவாரி தான் முக்கியம் என்று சொல்ல, மீனா கோபப்படுகிறார்.

நீயே பக்கத்துல இருந்து எல்லாத்தையும் பாத்துக்கோ என்று சொல்லி முத்து போனை வைக்க, மீனா அதிர்ச்சியில் கலங்கி நிற்கிறார் இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement