• Sep 10 2024

ரஜினி, அஜித், சிவகார்த்திகேயனுடன் மோதல்.. ஜெயம் ரவியின் ‘பிரதர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

ரஜினி, அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படமும் அதே நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில், எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவான பிரதர் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இந்த படம் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்பட்ட நிலையில் சற்று முன் ஜெயம் ரவி தனது சமூக வலைதளத்தில் இந்த படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்

ஏற்கனவே தீபாவளி தினத்தில் ரஜினியின் வேட்டையன், அஜித்தின் விடாமுயற்சி மற்றும் சிவகார்த்திகேயனின் அமரன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஜெயம் ரவியின் பிரதர் படமும் அதே நாளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, சரண்யா பொன்வண்ணன், நடராஜன் சுப்பிரமணியம், விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிரதர்’ படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 


Advertisement

Advertisement