• Jan 19 2025

தீரா சாதனைகளும் ஆறா ரணங்களும்.. ’கோட்’ போட்டியாக அஜித் குறித்த பதிவு

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் திரை உலகில் அறிமுகம் ஆகி 32 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து, லைகா நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அஜித் குறித்து பெருமையாக செய்துள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் அஜித் கடந்த 1993 ஆம் ஆண்டு ’அமராவதி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் என்பதும் இதனை அடுத்து திரையுலகில் அறிமுகம் ஆகி 32 ஆண்டுகள் ஆனதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் அஜித்தின் ’விடாமுயற்சி’ படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் அஜித்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒரு பதிவை செய்துள்ளது. இந்த பதிவில் ’32 ஆண்டுகள் தீரா சாதனைகளும் ஆறா ரணங்கள் யாவையும் எதிர்கொண்டு வெல்லும் விடாமுயற்சி’ என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் ’விடாமுயற்சி’ படத்தின் அட்டகாசமான போஸ்டரும் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


பொதுவாக விஜய் திரைப்படத்தின் அப்டேட் ஏதாவது ஒன்று வெளியானால் அதற்கு முந்தைய நாளோ அல்லது அடுத்த நாளோ அஜித் படத்தின் அப்டேட் வெளியாகி வருவது கோலிவுட்டில் வழக்கமான ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் இன்று மாலை விஜய்யின் ’கோட்’ திரைப்படத்தின் 3வது சிங்கிள் பாடல் வெளியாக இருக்கும் நிலையில் அஜித்தின் 32 ஆண்டு கால சாதனை குறித்த போஸ்டர் வெளியாகி உள்ளது.

 இதனை அடுத்து அஜித்தின் 32 ஆண்டுகள் சாதனைக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



Advertisement

Advertisement