• Jan 19 2025

புடவை கடை ஆரம்பிக்கிறார் ‘கயல்’ நடிகை.. சினேகாவுக்கு போட்டியா?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘கயல்’ சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை புதிதாக புடவை கடை ஆரம்பிக்க இருக்கும் நிலையில் ஏற்கனவே புடவை கடை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வரும் சினேகாவுக்கு போட்டியா? என ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

சன் டிவியில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘கயல்’ என்பதும் இந்த சீரியலில் கயல்விழி என்ற கேரக்டரில் சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார் என்பதும் தெரிந்தது. மேலும் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’டாப் குக்கு டூப் குக்கு’ என்ற நிகழ்ச்சியின் போட்டியாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை சைத்ரா ரெட்டி சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நிலையில் தற்போது பெங்களூரில் புடவை கடை ஆரம்பிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நிலவரசி என்ற பெயரில் இவர் கடை ஆரம்பிக்க இருப்பதாகவும் இவர் கடையில் விற்பனைக்கு இருக்கும் புடவைகள் எல்லாமே பிரத்யேகமாக நெய்தது என்றும் இவரே ஆர்டர் கொடுத்து நெய்ய வைத்து அந்த புடவைகளை மட்டுமே இவர் தனது கடையில் விற்க போவதாகவும் தெரிகிறது.

ஆகஸ்ட் 9ஆம் தேதி சைத்ரா  தனது கடையை திறக்க உள்ளதாக இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ள நிலையில் அவருடைய நண்பர்கள், சக நடிகர், நடிகைகள், ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் மட்டும் சென்னையில் சினேகா ஆரம்பித்த கடைக்கு போட்டியாக பெங்களூரில் கடை ஆரம்பிக்கிறீர்களா என்று காமெடியாக கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement